ரவுடி பினு மீது குண்டர் சட்டம் பதிவு!

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 10:00 am
case-filed-against-rowdy-binu

சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பிரபல ரவுடி பினு மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

ரவுடி பினு கடந்த 2018 பிப். 7ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை அமைத்து ரவுடி பினுவை போலீசார் தேடி வந்தனர். பிப்ரவரி 13ஆம் தேதி போலீசில் சரணடைந்த பினுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

3 மாதம் சிறையில் இருந்து பினு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், ரவுடி பினு கையெழுத்திடாமல் தலைமறைவானார். இதையடுத்து மார்ச் 18ஆம் தேதி  ரவுடி பினு சென்னை எழும்பூரில் காவல்துறையினரிடம் சிக்கினார். 

இந்நிலையில், ரவுடி பினு மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் ரவுடி பினு மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close