பி.இ., பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்!

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 10:59 am
online-counseling-start-for-engineering-admission

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது. 

தமிழகத்தில் உள்ள பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறுகிறது. இன்று நடைபெறும் முதல் சுற்றுக்கான கலந்தாய்வில், கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் 9,500 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தோ அல்லது உதவி மையங்கள் மூலமாகவோ இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும்,  www.tneaonline.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close