உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிடுக: மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 01:24 pm
dmk-chief-mk-stalin-urged-sc-to-release-judgement-in-tamil-language-also

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வரும் சூழ்நிலையில், தீர்ப்புகளில் உள்ள சாராம்சம் மற்றும் தீர்ப்பின் வாத - பிரதிவாதங்களை தெரிந்துகொள்ள வசதியாகவும், முதற்கட்டமாக இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, அசாமி, ஒடியா ஆகிய 6 மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது; எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியீடு!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close