தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 01:17 pm
showers-in-tamil-nadu-and-puducherry

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 செ.மீ., மழையும், தேனி மாவட்டம் பெரிய ஆறில் 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close