11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 03:23 pm
postponement-of-11-mlas-elimination-case

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முன்னாள் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. ஏ.கே.சிக்ரி ஓய்வு பெற்றதால் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

இதனிடையே, 11 எம்.எல்.ஏக்கள் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நேற்றைய தினம் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.  கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு உடனே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி புதிய அமர்வு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close