அத்திவரதர் வைபவ விழாவில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 03:32 pm
auto-driver-attempts-self-immolation

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவ விழா நடைபெறும் இடம் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவ விழா இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து.வருகின்றனர்.

இந்த நிலையில், விழா நடைபெறும் இடம் அருகே சென்று வர ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் அனுமதிச்சீட்டு இருந்தும், போலீசார் அவருக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அவ்விடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close