மக்களை ஏமாற்றவே தண்ணீர் போராட்டம் நடத்துகிறார் ஸ்டாலின்: வானதி சீனிவாசன்

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 04:16 pm
stalin-is-waging-a-water-struggle-to-deceive-people-vanathi

மக்களை ஏமாற்றுவதற்காகவே காலி குடங்களை வைத்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவில்  உறுப்பினர் சேர்க்கைக்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்சியில் சேர விரும்புவோர்  8980808080 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினராக இணைந்துக்கொள்ளும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த முறை நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கையில் 40 லட்சம் பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் 6ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். 

மத்திய, மாநில அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படாது எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தாது என்றும் திட்டவட்டமாக கூறினார். 

மக்களை ஏமாற்றுவதற்காகவே  காலி குடங்களை வைத்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார் என்று குற்றம்சாட்டிய அவர், எத்தனை நீர்நிலைகள் திமுக ஆட்சியில்  தூர்வாரப்பட்டன என்பதை ஸ்டாலின் அறிக்கையாக அளிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

தண்ணீர் பிரச்சனையிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்த வானதி சீனிவாசன், காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சி என்றும், பாஜக தனி ஒரு நபருக்கோ, குடும்பத்திற்கோ சொந்தமான கட்சி அல்ல என்றும் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close