5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா வழங்கப்படும்: அமைச்சர் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 04:06 pm
minister-announced-patta-will-be-given-if-they-are-living-the-place-5-years-or-above

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாதவரம் தொகுதி திமுக உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவரம், நெற்குன்றம், மேட்டு சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள 15 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதே நேரத்தில், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கஜா புயல் நிவாரணம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "கஜா புயல் பாதித்த இடங்களில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த திட்டத்துக்காக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டுள்ளது. 

இதுதவிர, அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருந்தால், அவர்களது வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close