ஆசிரியர் தகுதித் தேர்வு: மதிப்பெண் வழங்க மதுரைக்கிளை உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 04:28 pm
madurai-court-ordered-trb-to-give-mark-to-petitioner

ஆசிரியர் தகுதித் தேர்வில் 'வந்தே மாதரம்' பாடல் தொடர்பான கேள்விக்கு சரியாக பதிலளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தே மாதரம் பாடலை முதலில் எம்மொழியில் எழுதப்பட்டது? என்பது குறித்த கேள்விக்கு 'சமஸ்கிருதம்' என்று விடையளித்த நபருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால். வங்கமொழி என்பது தான் சரியான விடை என்றும் தான் சரியான விடை எழுதியுள்ளதாகவும், அதனால் தனக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும், ஒரு மதிப்பெண் வழங்குவதால் மனுதாரர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால், பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டதால், வேலை வாய்ப்பு கோர முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close