முதல்வருடன் விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 04:50 pm
kallakurichi-mla-meets-cm

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும், விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் இன்று, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார். 

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்தசூழ்நிலையில் நேற்று அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் இன்று விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசி வருகிறார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close