அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 07:53 pm
athi-varadar-function-court-questioned-to-tn-government

அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பூஜை விவரங்கள் என்னென்ன என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அபூர்வ நிகழ்ச்சியான அத்திவரதர் தரிசனம், நேற்று முன்தினம் (ஜூலை 1) தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 48 நாட்கள் இவ்விழா நடைபெறவுள்ள நிலையில், வரதராஜர் பெருமாள் கோவிலை நிர்வகித்து வந்த தத்தாச்சாரியார் குடும்பம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது ஒரு வழக்கு தொடுத்துள்ளது.

அதில், " கடந்த 1991 -ஆம் ஆண்டு முதல் தங்களது குடும்பத்தினர், கோவிலில் முறையான பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பூஜை விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இவ்வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஜூலை 5) ஒத்திவைத்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close