போலீஸ் கைதிலிருந்து பிக்பாஸ் நடிகையை காப்பாற்றிய மகள்!

  கிரிதரன்   | Last Modified : 03 Jul, 2019 08:36 pm
police-case-on-bigboss-actress-vanitha-suddenly-changed

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிசியாக உள்ள நடிகை வனிதா விஜயகுமார், சென்னை அருகே செம்பரம்பாக்கம் பகுதியில், இந்நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான வீட்டில் தங்கி, பிக்பாஸில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், தமது மகளை வனிதா, கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி கடத்தி கொண்டு சென்று விட்டதாக, வனிதாவின் மீது  அவரது கணவர் ஆனந்தராஜ், தெலங்கானா மாநில போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், தெலங்கானா போலீஸார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவிடம் இன்று இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக, வனிதாவின் மகள் ஜெனிதா, தான் தாயிடமே இருக்க விரும்புவதாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத் தலைவர் வசுந்தராவிடம் இன்று தெரிவித்தார். அதாவது, தனது தந்தை ஆனந்த்ராஜ் புகாரில் தெரிவித்துள்ளபடி, தமது தாயான வனிதா தன்னை கடத்தி வரவில்லை என ஜெனிதா கூறியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கில், தெலங்கானா போலீசாரின் கைது நடவடிக்கையிலிருந்து வனிதா தப்பித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close