500 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 09:43 am
500-new-buses-to-start-service

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் 500 புதிய பேருந்துக்களின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.159 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள் உட்பட 500 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ரூ.7 கோடி மதிப்பீட்டிலான 137 உபகரணங்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close