டிக்டாக் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 11:25 am
sc-rejected-plea-reg-tiktok-case

சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும்  'டிக்டாக்' செயலிக்கு தடை கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனுவானது இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

டிக்டாக் செயலியை, இளைஞர்கள், குழந்தைகள், மாணவர்கள் பயன்படுத்தும்போது, உயிரிழப்புகள் அதிகரித்து வருவதனால் டிக்டாக் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த வழக்கின் விசாரணையில், டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று டிக்டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவை  உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close