வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 04 Jul, 2019 01:14 pm
vellore-loksabha-constituency-election-will-be-held-on-aug-5-2019

வருகிற ஆகஸ்ட்5ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த, தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர் துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் சுமார் 11 கோடி அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நாள் : ஜூலை 11, 2019

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூலை 18, 2019

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள்: ஜூலை 19, 2019

வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: ஜூலை 22, 2019

தேர்தல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 5, 2019

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 9, 2019

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close