திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 03:15 pm
udhayanidhi-stalin-appointed-as-dmk-youth-secretary

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, முரசொலி நிர்வாகத்தின் இயக்குனராகவும் உதயநிதி ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளராக  நியமிக்கப்பட்டதையடுத்து, அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்றுவிட்டு, பின்னர் மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close