‘குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல்நலம் கெடத்தான் செய்யும்; நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’: அதிமுக அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 04:20 pm
drinking-too-much-will-cause-bad-health-there-is-nothing-we-can-do

கள்ளச்சாராயம் பெருகும்  என்பதால் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டு வருகின்றன என்று, டாஸ்மாக்கடை குறைப்பு எந்தளவில் உள்ளது என்ற எம்எல்ஏ பிரின்ஸ் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்தார். 

மேலும், ‘குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல்நலம் கெடத்தான் செய்யும்; நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற அமைச்சர், தமிழகத்தில் இதுவரை 980 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்துக்கு எப்போது போன் செய்தாலும் யாரும் எடுப்பதே இல்லை வெயிட்டிங்தான் வருகிறது. மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு போன் செய்தால் எடுத்து விடுகிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு ’1912 என்ற எண்ணுக்கு போன் செய்தால் இரவு 1 மணி ஆனாலும் நான் பிரச்னையை தீர்த்து வைப்பேன். 1912 என்ற எண்ணிற்கு அதிகப்படியான அழைப்புகள் வருவதால் வெயிட்டிங் பிரச்னை இருக்கிறது’ என்று பேரவையில் அமைச்சர் தங்கமணி பதில் தந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close