திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 04:26 pm
dmk-appoints-saminathan-as-new-post

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த பொறுப்பில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close