டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 04:36 pm
tn-govt-gives-hike-for-tasmac-employees

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2,000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் தங்கமணி தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு வாணிபக்கழக்தில் (டாஸ்மாக்) மொத்தம் 26 ஆயிரத்து 56 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக்கில் பணிபுரியும் இந்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். 

மேலும், இந்த ஊதிய உயர்வானது ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.62.53 கோடி செலவாகும் என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close