புதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமனம்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 05:22 pm
appointment-of-new-blood-stained-udayanidhi-stalin

திமுகவில் புதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

உதயநிதி நியமனம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. திமுகவில் புதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். உதயநிதி நியமனம் திமுகவுக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு’ என்றார்.

இளைஞரணியை வேகப்படுத்த அதன் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், வாரிசு அடிப்படையில் எதையும் பார்க்கக்கூடாது; திறமை அடிப்படையிலேயே பார்க்க வேண்டும் எனவும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுவதாகவும், இந்தியா முழுவதுமே இதுபோன்ற விஷயங்கள் நடப்பதாகவும் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close