திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் உதயநிதி!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 05:27 pm
udhayanidhi-gets-wishes-from-stalin

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதையடுத்து, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவர் இன்று வாழ்த்து பெற்றார். மேலும் பல திமுக நிர்வாகிகளும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முரசொலி  அறக்கட்டளையில் இயக்குனராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின், இன்று திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, அவர் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைத்து அவருடைய தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். மேலும், திமுக நிர்வாகிகள் பலரும் அவருக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கட்சியின் மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close