அதிர்ச்சி... 76 ரூபாய்க்காக ரூ.40,000 ஏமாந்த மாணவி!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 09:51 pm
shocked-in-chennai-rs-40-000-cheated-woman-for-rs-76

சென்னையில் போலி வாடிக்கையாளர் சேவை எண் மூலம் மாணவி ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40,000 மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரியா என்ற கல்லூரி மாணவி, உபேர் ஈட்ஸில் 76 ரூபாய்க்கான உணவை ஆர்டர் செய்த நிலையில், அது ரத்தானதால் அதற்கான பணம் திரும்ப வரவில்லை. இதையடுத்து, இணையதளத்தில் கிடைத்த உபேர் ஈட்ஸின் போலி வாடிக்கையாளர் சேவை எண்ணை பிரியா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிரில் பேசிய நபர், 76 ரூபாய் குறைந்த தொகை என்பதால், ரூ.5,000 செலுத்தினால், 5,076 ரூபாயாக திரும்பக் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

இதை நம்பி பிரியா பணம் செலுத்தியுள்ளார். பணம் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என அந்த நபர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்ததையடுத்து, அந்த மாணவி 8 முறை ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.40,000 செலுத்தி ஏமாந்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close