உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது: முதலமைச்சர்

  அனிதா   | Last Modified : 05 Jul, 2019 10:06 am
tamil-nadu-is-the-pioneer-in-organ-transplantation

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 584 மருத்துவ அலுவலர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதை தொடர்ந்து இருதய மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சேவை மனப்பான்மையுடன் மருத்துவ அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், ஏழை கர்ப்பிணிகளுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.  

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close