தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 10:59 am
vaiko-case-hearing-in-special-court

கடந்த 2009ம் ஆண்டு தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி என அறிவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2009ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வைகோ மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார். 

குற்றவாளி எனஅறிவிக்கப்பட்டவுடன், தண்டனையை இன்றே வழங்குமாறு வைகோ நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி, இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வைகோவுக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close