சமூக சேவையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

  அனிதா   | Last Modified : 05 Jul, 2019 02:08 pm
to-be-encouraged-social-workers-governor-banwarilal-purohit

சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் கேட்டுக்கொண்டுள்ளார். 

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் "கோவை கெத்து" என்னும் தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கல்வி, கலை, அறிவியல், விவசாய, நீர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை ஆற்றிய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூகஆர்வலர்கள் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சேவை புரிபவர்களை கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாகவும், இதுபோன்ற விருதுகள் வழங்கி சமூக ஆர்வலர்களை, மக்களாகிய நாம் தொடர்ந்து ஊக்குவித்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

மேலும், இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுப் பணிகளில் ஈடுபடுபவர்கள் வெளியுலகத்திற்கு தெரி. வருவார்கள் என்றும், அதன் மூலம் பலர் இது போன்ற சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது பங்களிப்பை மேலும் அதிகமாக வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார். அதோடு இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்கள் பணி தொடர வாழ்த்து தெரிவிப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் தெரிவித்தார்.

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close