மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக ஷாப்பிங்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 04:24 pm
people-can-purchase-from-chennai-metro-card

சென்னை மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி சில்லறைக் கடைகளில் பொருட்களை வாங்கும் வசதி விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயிலில் தள்ளுபடி விலையில் பயணம் செய்ய 'மெட்ரோ ரயில் கார்டு' வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் கார்டுகளை பயன்படுத்தி ரயிலில் பயணம் செய்வது மட்டுமின்றி வாகன ‘பார்க்கிங்’ கட்டணம் செலுத்தும் வசதியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தொடங்கி வைத்தார்.  

பின்னர் பேசிய அவர், "கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம், வடபழனி, ஆலந்தூர், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஹைகோர்ட், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி. ஆகிய 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். 

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் கார்டுகளை பயன்படுத்தி ஹோட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில்லறைக் கடைகளில் பொருட்களை வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close