130 கோடி மக்களுக்கான பட்ஜெட் - அமைச்சர் பியூஷ் கோயல்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 04:41 pm
piyush-goyal-on-budget

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மேக் இன் இந்தியா ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டானது உத்வேகத்தை கொடுத்துள்ளது என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் அதற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இதன் பின்னர் தேர்தல் முடிவுற்ற நிலையில், நடப்பு ஆண்டிற்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். 

மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்த பட்ஜெட்டானது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மேக் இன் இந்தியா ஆகியவற்றுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இது சமூக பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்த வர்த்தகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கியுள்ளது. எனவே சீர்திருத்தம் சார்ந்த பட்ஜெட். மேலும், ஒட்டுமொத்த 130 கோடி மக்களுக்கான பட்ஜெட்.

ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வதற்கு வழிவகுக்கும். உள்கட்டமைப்பு மேம்படும். அனைவருக்கான பட்ஜெட். ரயில்வே துறையில் கொண்டு வரப்படவுள்ள திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close