பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு! இன்று நள்ளிரவு முதல் அமல்..

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 05:15 pm
petrol-price-will-be-hiked-by-over-rs-2-5-per-litre-and-diesel-by-more-than-rs-2-3

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 மற்றும் டீசல் விலை ரூ.2.30 உயருகிறது.

நடப்பு ஆண்டிற்கான முழு பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். 

பட்ஜெட்டில், சாலை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. நெடுஞ்சாலை வரி & உற்பத்தி வரி தலா ரூ.1 மற்றும் உள்ளூர் வரிகளுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 மற்றும் டீசல் விலை ரூ.2.30 உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் புதிய விலை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close