மதுரையில் அதிர்ச்சி: கட்டடம் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 08:42 pm
madurai-shock-worker-dies-as-building-collapses

மதுரை செக்கானூரணியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக்கானூரணியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் 3-ஆவது மாடி இடிந்து விழுந்ததில்  7 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 4 தொழிலாளர்களை மீட்டனர். இதில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காசிநாதன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 35.
எஞ்சியுள்ள 3 பேரை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், எஸ்.பி., உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கட்டட விபத்து தொடர்பாக உரிமையாளர் மாதவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close