எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு!

  அனிதா   | Last Modified : 06 Jul, 2019 10:13 am
mbbs-rank-list-release

தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் 23 அரசு கல்லூரிகளில் 3250 எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர்வதற்கு சுமார் 60 ஆயிரம் பேர் விண்ணப்பத்துள்ளனர். இந்த மருத்துவப்படிப்புகளுக்கான தரவரிசைபட்டியல் இன்று வெளியானது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இதனை வெளியிட்டார். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் ராஜ், கோவையை சேர்ந்த இளமதி ஆகியோர் 2 ஆம், 3ஆம் இடங்களை பிடித்துள்ளனர். 

மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில்  தரவரிசை பட்டியலை தெரிந்துக்கொள்ளலாம். மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close