ஸ்டாலின் முன்னிலையில் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்!

  அனிதா   | Last Modified : 06 Jul, 2019 11:20 am
nomination-filed

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

2019 மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக கட்சிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தலா ஒரு இடம் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடவுள்ளார். 

இதேபோல், திமுக சார்பில் தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகம் சென்ற வைகோ, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பேரவை செயலாளரிடம் அளித்தார். தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன்,  டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close