வேட்புமனுத் தாக்கல்: ஸ்டாலின், கனிமொழி தலைமைச் செயலகம் வருகை!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 10:44 am
vaiko-to-be-filed-nomination-today-for-rajyasabha-election

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

2019 மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுகவுக்கு மாநிலங்களவையில் ஒரு இடம் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக - மதிமுக ஒப்பந்தப்படி, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 

இன்று சென்னை தலைமை செயலகத்தில் பேரவை செயலரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதேபோன்று திமுக சார்பில் தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 

திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close