வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 12:06 pm
vellore-election-admk-candidate-announced

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தொகுதிக்கான மறுதேர்தல் வருகிற ஆகஸ்ட்5ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, மக்களவைத் தேர்தலின் போது, வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் தான் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close