வேலை செய்தது போல ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ

  அனிதா   | Last Modified : 06 Jul, 2019 12:41 pm
stalin-gives-photo-pose-as-he-did-minister-sellur-raju

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு செய்த பணிகளை தான் செய்தது போன்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

மதுரையில் உள்ள செல்லூர் கண்மாயை தூர் வாரும் பணியினையும், மதுரை வைகையாற்றில் 35 கிலோ மீட்டர் நீளத்திற்கு கருவேல மரங்களை அகற்றும் பணியினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசியர் அவர், "வைகையை காக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், ஜெயலலிதா இல்லா விட்டாலும் ஜெயலலிதாவின் எண்ணங்களின் படி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து வந்ததாக சொல்லப்படும் வரலாற்று சிறப்பு மிக்க வைகையை காப்பாற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் போன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு செய்த பணிகளை தான் செய்தது போன்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை எமாற்றி 2021 ல் ஆட்சிக்கு வர நினைப்பதாகவும் விமர்சித்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்ந்து நடைபெறும்" என பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரை மண்ணின் மகளான நிர்மால சீத்தாராமன் நிதியமைச்சராக இருப்பது பெருமையளிப்பதாகவும், அவர் எந்த துறையில் பதவி வகித்தாலும் சிறப்பாக செயல்பட கூடியவர் என்று குறிப்பிட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறி வந்ததாக சரித்திரம் இல்லை என்றும் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது" என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close