உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதியுதவி: தமிழக அரசு

  அனிதா   | Last Modified : 06 Jul, 2019 01:09 pm
sponsored-by-rs-1-crore-to-world-tamil-research-conference

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவின் சிகாகோ நகரில்  10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆம் தொடங்கி நடைபெற்று வரும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை உலத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், வடஅமெரிக்கா தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து செய்துள்ளன. 

இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், திரைப்பட இயக்குநர்கள் என பல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நெதர்லாந்து என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 8 ஆயிரம் தமிழறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.  

இந்த மாநாடு நாளையுடன் நிறைவடைகிறது. இதனிடையே தமிழக அரசு, உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close