பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணையுங்கள்: முதல்வர் அழைக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 06:26 pm
join-everyone-in-admk-cm-palanisamy

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

முதல்வரின் பேட்டியில் மேலும், ‘பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் தாய் கழகத்தில் இணைய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து வருகின்றனர்’ என்றார்.

தொடர்ந்து முதல்வர் அளித்த பேட்டியில், ‘கோதாவரி காவிரி இணைப்பிற்காக விரிவான திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சேலம் உருக்காலை விவகாரம் பொதுப்பிரச்னை; இதில் பிற மாநிலங்களை போல் இணைந்து செயல்படுவோம். சேலம் உருக்காலையை தனியார்வசம் ஒப்படைக்ககூடாது என்ற அடிப்படையில் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்’என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close