தென்காசி மாவட்டம்?, 2 மாதங்களில் ரூ.2,000: முதல்வர் உறுதி

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 08:37 pm
tenkasi-district-rs-2-000-in-2-months-chief-minister-confirmed

தென்காசி மக்களின் கோரிக்கையான நெல்லையை இரண்டாக பிரித்து தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலிப்பதாகவும், ஏழை குடும்பங்களுக்கு இன்னும் 2 மாதங்களில் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தென்காசியில் அதிமுகவில் இசக்கி சுப்பையா இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

நாட்டிலேயே கல்விக்காக அதிக நிதி ஒதுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் என  பெருமிதத்துடன் கூறிய முதல்வர், வல்லரசு நாடுகளில் கூட இல்லாத வகையில் தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படுகிறது என்றார்.

மேலும், ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதாகவும், மு.க.ஸ்டாலின் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு காலத்திலும் முதல்வராக முடியாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close