கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக தயாராக உள்ளது: சதானந்த கவுடா

  முத்துமாரி   | Last Modified : 07 Jul, 2019 08:59 am
we-are-ready-to-form-a-government-sadananda-gowda

சட்டப்படி ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைத்தால் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக தயாராக உள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். 

மேலும், கர்நாடகாவில் பாஜக தான் 105 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது என்றும் பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் எடியூரப்பா தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, காங்கிரஸில் 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து காங்கிரஸில் 9  எம்.எல்.ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் என 12 பேர் நேற்று தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர். 

நேற்றைய தினம் சபாநாயகர் சட்டப்பேரவையில் இல்லாததால், வருகிற திங்கட்கிழமை இவர்களது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரியவரும்.

newstm.in

12 எம்.எல்.ஏ.,க்கள் திடீர் ராஜினாமா: ஆட்சிக்கு ஆபத்து?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close