ஜோலார்பேட்டை தண்ணீர் வருகிற ஜூலை 10ம் தேதி முதல் விநியோகம்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 10:46 am
water-has-brought-from-jolarpettai

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வருகிற ஜூலை 10ம் தேதி முதல் சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் பெரும்பாலாக அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதை அடுத்து, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலமாக தண்ணீர் எடுத்து வரப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து எடுத்து வரப்பட்ட தண்ணீர், வருகிற ஜூலை 10ம் தேதி முதல், சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close