கோலாகலமாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 10:38 am
chidambaram-natarajar-temple-thiruvizha

ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மக்கள் புடை சூழ இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமி நடராஜர் ஒவ்வொரு நாளும் தங்கம், வெள்ளி, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.

இந்நிலையில் இன்று நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலாமாகத் தொடங்கியுள்ளது விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளிய ஐந்து தேர்களும் பக்தர்களின் சிவ கோஷத்துடன் சிதம்பரம் நகரில் வலம் வருகின்ன்றன. 

இந்த நிகழ்வில் சிதம்பரம் மட்டுமல்லாது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close