நீட் மசோதா நிராகரிப்பு குறித்து கருத்துக் கூற முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 12:12 pm
minister-jayakumar-press-meet

நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தற்போது கருத்து கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் வீரர் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், "கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் மதிப்பளிப்பது அதிமுக மட்டுமே. கொடி கட்டிய தொண்டனும், இன்று கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில் தான். 

மக்களவைத் தேர்தலில் அருந்ததி மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். 

தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது. சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் திறம்பட செயல்பட்டு அவரை மீட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது" என்று கூறினார். 

மேலும், நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், "என்னை ஏன் இப்படி வறுத்தெடுக்கிறீர்கள்? நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தற்போது கருத்து கூற முடியாது" என்று பதில் அளித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close