மயிலாடுதுறையில் தடம்புரண்ட ரயில்: உயிர் தப்பிய பயணிகள்

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 04:20 pm
train-disrupted-at-mayiladuthurai-passengers-who-survived

கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலின் என்ஜின் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இன்று மதியம் 1.40 மணிக்கு திருச்சியில் இருந்து வந்த ரயில் 4-ஆவது நடைமேடைக்கு மாறியபோது ரயில்சக்கரம் தடம்புரண்டது. ரயிலின் சக்கரம் தடம்புரண்டவுடன் ஓட்டுநர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, ரயில் சக்கரம் தடம்புரண்டதால் திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close