சென்னையில் குறைந்தளவில் மின்சார ரயில்கள்: பயணிகள் அவதி

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 04:21 pm
chennai-low-electric-trains-passenger-struggled

சென்னையில் குறைந்தளவிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், கோடம்பாக்கம், மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

பராமரிப்பு பணி காரணமாக குறைந்தளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் அவதி அடைந்தனர்.

விடுமுறை நாள் என்பதால் குறைந்தளவிலேயே ரயில்கள் இயக்கப்படுவதாக குற்றம்சாட்டிய பயணிகள், எந்தவித முன்னறிவிப்புமின்றி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close