உடலுறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ள 2 அமைச்சர்கள்!

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 09:35 am
2-ministers-approved-for-organ-donation

அமைச்சர் ஜெயக்குமாரும், தானும் உடலுறுப்பு தானம் செய்ய ஒப்புதல் படிவம் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, உடலுறுப்பு தானத்தில் எந்த முறைகேடும் இல்லை எனவும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். 

தானும், அமைச்சர் ஜெயக்குமாரும் உடலுறுப்பு தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவம் அளித்துள்ளதாக  தெரிவித்த அவர், உடலுறுப்பு தானத்தில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும்,  உடல் உறுப்பு பெற நோயாளிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு உறுப்புகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close