மாநிலங்களவை தேர்தலில் வைகோவுக்கு சிக்கல்? திமுக மாற்று ஏற்பாடு?

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 10:43 am
vaiko-s-trouble-in-rajya-sabha-elections-is-the-dmk-alternative

மாநிலங்களை தேர்தலில்  வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ போட்டியிட திமுக ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் வைகோ மனுவை நிராகரிக்க பிறக்கட்சிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளது என்பதால் வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்  என்.ஆர்.இளங்கோ போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.  நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close