ஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து மனு!

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 11:25 am
petition-to-oppose-ops-son-s-victory

தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் துணை முதலமச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தேனி மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ரவீந்திர நாத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் வெற்றி பெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close