மாநிலங்களவை தேர்தல்: திமுகவை சேர்ந்த இளங்கோ வேட்பு மனு தாக்கல்!

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 11:54 am
rajya-sabha-polls-dmk-candidates-file-nomination

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட என்.ஆர் இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், மதிமுகவை சேர்ந்த வைகோ ஆகியோர் நேற்று முன்தினம் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இந்நிலையில் மதிமுக வேட்பாளர் வைகோவுக்கு  தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது மனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது. 

இதனால், வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதில் திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ போட்டியிடும் வகையில் மாற்று ஏற்பாடு செய்துள்ளது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைவதால், திமுக சார்பில் போட்டியிடும் என்.ஆர்.இளங்கோ இன்று தலைமைச்செயலகத்தில் பேரவைச் செயலாளரிடன் தனது வேட்பு மனுவை அளித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close