நான் எம்.பி ஆவதையே ஸ்டாலின் விரும்புகிறார்: வைகோ

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 12:39 pm
stalin-wants-me-to-be-an-mp-vaiko

நான் மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் என்பதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " மக்களவை தேர்தல் நேரத்தில், திமுக கூட்டணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது, நான் எம்.பி.யாக போட்டியிடுவதாக இருந்ததால் தான் மாநிலங்களவையில் ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டதாகவும், மாநிலங்களவை சீட் எனக்காகவே ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

தேசத்துரோக வழக்கில் தண்டனை கிடைக்கும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றும், ஏனெனில் சுதந்திர இந்தியாவில் இதுபோன்றதொரு தண்டனை யாருக்கும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும், நான் எம்.பி ஆக வேண்டும் என்பதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் எனவும், தீர்ப்பு வருவதற்கு முந்தைய தினம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தீர்ப்பை பொறுத்து மாற்றுஏற்பாடு செய்து கொள்ளும்படி நான் தான் வலியுறுத்தியதாகவும் வைகோ கூறினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close