ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: ராஜகோபால் தவிர 9 பேர் சரண்

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 03:33 pm
jivajoti-husband-s-murder-case-9-people-surrender-apart-rajagopal

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் தவிர 9 பேர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். 

முக்கிய குற்றவாளியான சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர, அவரின் மேலாளர் டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் சென்னை 4 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். ராஜகோபால் உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய அவகாசம் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜனார்த்தனனும் சரணடைய அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சரணடைய நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி இன்று அவர் சரணடையவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close