மருத்துவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 04:40 pm
physician-associations-announce-protest

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12- ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜூலை 16 -ஆம் தேதி, சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரிய அறிவிப்பு வராவிட்டால் பணி புறக்கணிப்பும், ஜூலை 18 -ஆம் தேதி வெளிநோயாளிகளுக்கான மருத்துவத்தை புறக்கணித்தும் போராட்டம் நடத்துவோம் என்றும் அரசு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close